127. எங்கே அவர்கள்??_10.7_Mary Naveena

0
478

எங்கே அவர்கள்??

நாமெல்லாம் இங்கே உலவிக்கொண்டிருக்க

இங்கேயிருந்த மனித ஜீவிகள் 

எங்கே போனார்கள்?

மரண பயம் கொண்டு முடங்கிப் போனார்களோ?

எட்டுத் திக்கும் எவருமில்லை..

எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருந்தவர்கள்

எங்கே ஒளிந்து கொண்டுள்ளார்கள்??

நாங்கள் ஒன்றும் உங்கள் அளவிற்கு 

கொடியவர்கள் இல்லை!

வாருங்கள் வெளியே..

இது அனைவருக்குமான உலகம்!!

பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here