129. வானம் படரலாம் வா_9.13_Mary Naveena

0
548

வானம் படரலாம் வா

நெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும் 

தப்பிப் பிழைத்தவளே!

நீ எதிலும் சளைச்சவளில்லையே!!

தேவதையென்று சொல்லி அடக்கி வைப்பவர்களிடம் 

இரண்டடி தள்ளியே நில்..

அவர்கள் சொல்லும் தேவதையெல்லாம்

மென்மைக்கு மட்டுமே இலக்கணப்பட்டவர்கள்!!.

ஆனால் நீயோ

வரையறைக்கு அப்பாற்பட்டவள்..

உன்னைத் தடுத்து நிறுத்தவோ

தள்ளி வீழ்த்தவோ 

பெண் என்று நசுக்கவோ

எவருக்கும் இடமளியாதே!

உறங்காத விருட்ஷம் நீ..

மடிந்தாலும் ஒரு நாள் முளைத்தெழுவாய்..

வனம் அல்ல உன் இலக்கு!

வனம் தாண்டி வானம் படரலாம் வா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here