19. கல்லறையிலும் கைபேசி_ 12.3_மித்ரா பரணி

0
472

கல்லறையிலும் கைபேசி

கல்லறையிலும் என் கைபேசியை

வையுங்கள்..!

இருந்த காலமெல்லாம்,

விரிந்த வானமும்
வண்ணம் தூவிய விடியலும்
வானம்பாடியின் சங்கீதமும்
காற்றின் ஸ்பரிசமும்
மழையின் நடனமும்
மழலையின் சிரிப்பும்
மண் வாசமும்
மகவின் மொழியும்
சுற்றமும் நட்பும்
அது பொழிந்த அன்பும்
என, எதையும் கண்குளிரக்
கண்டு மகிழாது,
ஆழ்ந்து அனுபவிக்காது,
கைபேசியுடன் மட்டுமே
காலத்தைக் கழித்து
தனிமை சிறையில் சிக்கி
அதிலிருந்து விடுதலை
பெறும் முன்னரே,
உடலுக்கும் உயிருக்குமான
விடுதலையை பெற்று விட்டேன்.

இடுகாட்டிலும் போய் பக்கத்திலிருக்கும்

பேய் பிசாசுகளோடு பேசிக் களிக்காமல்
என் கைபேசியில்
ஃபேஸ்புக்கையே நோண்டுகிறேன்.

அதனால் கல்லறையிலும்

என் கைபேசியை வையுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here