23. பெரிதல்ல _7.2_ சுதா ரவி

0
438

உன் முகம் பார்த்து நிற்கும் அவனது உருவம் பெரிதல்ல

அழைக்காமலே உன்னோடு பயணிக்கஆவலாய் நிற்கும் அவன் உருவம் பெரிதல்ல

உன் மீது கொண்ட பிணைப்பில் அக்கயிறு இல்லாமலே உணர்வுகளால் பிணைந்திருப்போம்

 நீ காட்டிய அன்பில் உருகி நிற்கும் அவன் உருவம் பெரிதல்ல

உன் அன்பில் கட்டுண்டு கிடக்கும் அவன் உருவம் பெரிதல்ல

அந்த அன்பிற்காக அவன் காட்டும் நன்றியின் முன்

உன் உருவம் பெரிதல்ல!
                                                    …..சுதா ரவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here