29.காதலின் அளவுகோல்_14.6_ சேதுபதி விசுவநாதன்

1
882
தாஜ்மகாலே…

காதலின் சின்னமென்றும்
உலகின் அதிசயமென்றும்அவன் அவளின் நினைவால் செதுக்கிய
அன்பின் அரங்கமென்றும்
ஆயிரம் ஆயிரம் காதலர்கள் கூடி
தினந்தோறும் உந்தன் துதி பாடுகிறார்கள்…

உன்னை அழகாக காட்டிடவே
அழகற்ற நானும்
அருவருக்கத்தக்க மனிதனாக
அவர்களின் கண் முன்னால்…

என்னுள்ளே கலந்துவிட்ட
என்னுயிர் தேவதையின்
பொன்பசியினை தீர்த்திடவே
உன் பணியாளனாய்….

தாஜ்மகாலே…
உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்…

மற்றவனை பார்த்தும்
சுற்றத்தை சுட்டியும்
ஆழ்மான காதல் இதுவென்று
அளந்திட கூடாதென்று…

காதலின் அளவுகோல்
கட்டிடமும் இல்லை
அன்பின் ஆழம்
அழ(ழு)கு(ம்) உடலும் இல்லை
இங்கே….!!!

பனி சூழ்ந்த பொழுதை போல
அன்பு மறைந்த காதலே அதிகம்…

               – சேதுபதி விசுவநாதன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here