37. இயற்கையை போற்றுவோம்!_13.1_ஜெயக்குமார் சுந்தரம்

0
550

இயற்கையை போற்றுவோம்!

கழுகு பார்வை கண் ஒன்று படம் பிடித்தது – அதில்

கட்டிடங்கள் உயர்ந்து வளர்ந்து காட்சியளிக்குது

மரங்களெல்லாம் இலையில்லாமல் மொட்டையானது

மாசு நிறைந்த காற்றினாலே அழியப் பொகுது

கழனி நிலங்கள் வயல்களெல்லாம் அழிந்து போனது

கட்டிடங்கள் ஆங்காங்கே முளைத்து நிற்குது

பயிர் விளைந்த பூமியெல்லாம் பளபளக்குது

பார்க்கையிலே மனதுக்குள்ளே பதைபதைக்குது

பயிர் வளர்ந்த வயல் நிலங்கள் காட்சித் தெரியுது

பச்சை ஆடை உடுத்தி நிற்கும் அழகு சிரிக்குது

பசுமையான மரங்கள் வளர்ந்த காடும் தெரியுது

பச்சை இலைகள் அழிந்ததனால் மாசுப் பெருகுது

பச்சை இலைகள் அதிகரித்தால் மாசுக் குறைந்திடும்

கட்டடங்கள் அதிகரித்தால் மாசுப் பெருகிடும் 

பயிரினங்கள் இல்லையென்றால் பஞ்சம் தோன்றிடும்

பட்டினியால் மக்கள் இனம் மடிந்து மாய்ந்திடும்

கட்டடங்கள் உயர்ந்து நின்றால் வேலை பெருகிடும்

வேலை பெருக மக்களது வாழ்வு உயர்ந்திடும்

வாழ்வு உயர வசதிகளும் சேர்ந்து உயர்ந்திடும்

வசதி பெருக மாசு பெருகி இயற்கை அழிந்திடும்

உயிரினங்கள் வாழ்வதற்கு உணவு முக்கியம்

உணவில்லாத பணத்தினாலே என்ன பிரயோஜனம்

உழவன் சேற்றில் காலை வைத்தால் உணவு நிச்சயம்

உழவுத் தொழில் உயர்வடைய ஒன்று கூடுவோம்.

வானம் பூமி நீர்நிலைகளும் இறைவன் வரமன்றோ!

ஆதவனும் மலை காடும் அவன் கொடையன்றோ!

வான் நிலவும் விண்மீன்களும் இறையருளன்றோ!

இயற்கையினை பாதுகாத்தல் நமது கடனன்றோ!  

                 – ஜெயக்குமார் சுந்தரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here