38.வீழ்ந்திடும் வேர்கள் _8.4_சேதுபதி விசுவநாதன்

0
234

வீழ்ந்திடும் வேர்கள்

ஊரே‌போற்றும் உயர்ந்தவனாய்
பல வெற்றிகளை கொண்டவனாய்
கோடி சிரிப்புகள் உதிர்த்திட்டாலும்

யாரும் அறிய எந்தன் மறுபக்கத்தில்
நூறு அல்ல.. ஆயிரம் அல்ல..
எண்ண முடியாத தோல்விகளும்
விண்ணை தொடும் துரோகங்களும்
மறையாத சோகங்களும்

ஆணிவேரென்று அடிமனதோடு
அமைதியாய் அசைபோடுகிறது…

காலங்கள் மாறினாலும்
கலையாத சுவடுகளாய்
சில நினைவுகள்
.
.
.
.
எந்தன் முதுமையில் திரும்பி பார்க்கிறேன்…..
– சேதுபதி விசுவநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here