39. ராணுவ வீரன்_11.15_ கவி அன்பு

0
466
Jansi M11:04 AM (3 hours ago)
to me

ராணுவ வீரன்
“எல்லை காக்க நீபுறப்பட்டு விட்டாய் அத்தான்!!!

மனதில் ஆயிரம் வலி இருந்தாலும், 

அதை மறைத்துக் கொண்டு

உச்சிதனில் இதழொற்றி

உன்னை அனுப்பி வைக்கிறேன்,

நீ வரும் வரை இந்த நினைவுகளில் தான் நாம்

இருவரும் இனிவரும் நாட்களைகடக்க வேண்டும்,

நீ இல்லாத நாட்களை நீ கொடுத்துச் செல்லும் 

என்னுல் இருக்கும் உன்பிள்ளை பார்த்து கொள்வான்

,ஆனால் எல்லையில் உன்னையார் பார்த்துக் கொள்வார்கள்

என்று நினைத்து பயந்தநேரத்தில் நானில்லையா?

என்று பூமித்தாயின் குரல்ஒலித்தது

சிலிர்த்து எழுந்தேன்,

அடுத்த தலைமுறையான

உன் புள்ளையையும்

எல்லை காக்க அனுப்பி வைக்க தயாராகிறேன்,

நான் நாட்டை காக்கும் ராணுவ வீரனின் மனைவி,

இதை விட பெருமை வேறென்ன வேணும்,

நீ நாட்டின் எல்லையில்காவல் இரு,

நான் உன் பிள்ளையை வளர்த்து

உனக்கு பிறகுஎல்லை காக்க அனுப்பி வைக்கிறேன் அத்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here