41.வேரூன்றிய உதடுகள்_8.5_Malathy Lingam

0
581

வேரூன்றிய உதடுகள்


என் உதடுகள் வேரூன்றி இருக்கின்றன… 

எல்லாம் உன்னால் தான்…


தினமும் என்னுடன் கதைத்ததும்

எனக்காக பாடியதும் நீ தான்…

இன்னமும் காத்திருக்கிறேன் 

கதைக்காகவும் பாடலுக்காகவும்…

யாருடனும் பேசப்பிடிக்காமல்

வேரூன்றிய உதடுகளோடு…

நித்தமும் என்னோடு வம்பளந்ததும் நீ தான்…

நிதமும் என் நிழல்களைத் தூசி தட்டி எழுப்புவதும் நீ தான்…

உன்னோடு மட்டும் உரையாட காத்திருக்கிறேன் 

வேரூன்றிய இதழ்களோடு…


எப்பொழுதும் என் கனவுகளோடு உறவாடியதும் நீ தான்… 

இப்பொழுதும் என் நினைவுகளைக் கனவுகளாக்குவதும் நீ தான்…

இன்னமும் காத்திருக்கிறேன் நிழல்கள் நிஜமாகி உறவாட…

வேரூன்றிய  அதரங்களோடு…


எந்நேரமும் என்னோடு அலைபேசியில் அளவளாவியவனும் நீ தான்…

 இந்நேரமாய்என் தொலைபேசி அழைப்பை எடுக்காமல் தொலைந்து போனவனும்  நீ தான்…

 அழைப்பாயா???காத்திருக்கிறேன்…

வேரூன்றிய உதடுகளோடு…


அன்று என்னைப் பேச வைத்து அழகு பார்த்தாய்..

இன்று என்னுடன் பேசாமல் இருந்து அழவைத்துப் பார்க்கிறாய்…

அழுதாலும் பேசுவேன்… 

அழவைக்காமல் பேசி தான் விடேன்… 

எதிர்பார்க்கிறேன்வேரூன்றிய இதழ்களோடு…


என் உதடுகள் மட்டும் வேரூன்றி இல்லை… 

என் உள்ளமும் வேரூன்றி தான் உள்ளது…

 உன் ஞாபகங்ளோடு…

எல்லாம் உன்னால் தான்…

உதடுகள் வேரூன்றி இருப்பதால் மறந்துவிட்டேன்

என்று எண்ணாதே… 

மரணத்திலும்  வேரூன்றி வெல்லும் 

உன் நிதர்சனங்கள்…


காத்திருப்பேன் என்றும்

வேரூன்றிய உதடுகளோடு…

எல்லாம் உன்னால்  தான்…


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here