43. ஆத்ம மெய்க் காதலன்_7.4_ Soundarya

0
647

ஆத்ம மெய்க் காதலன்


பெண்ணே நீ வருந்தாதே!
உன் கண்கள் உதிர்க்கும் ஒவ்வொரு துளியிலும்
என் உயிர் என்னிடமே
இடைவெளி கூட்டுகிறதடி!


உன் வீட்டு நாயின் மேல்
உனக்கிருக்கும் காதலை விட..
என்னுயிர் உன் மேல் கொண்ட

காதல் பெரிதடி பெண்ணே!


நீ அழுவது பொறுக்காமல் என் ஆத்மா
இந்த காதல் பிராணியை கைவிட்டு
உன் வீட்டுப் பிராணிக்கு உயிர் கொடுக்க தவிக்கிறதடி!


ஆத்ம காதலன் உயர்ந்தவன் தான்!
அன்பே இந்த மெய்க் காதலனும் உண்மை தானடி!
இரக்கம் காட்டு என் மெய்யிடமும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here