46. என் படைவீரன்_ 11.16_ஆஹிரி

0
527

என் படைவீரன்

நேற்று வரை என் இரவுகளை

உன் கூடல்களால்

திருடிக்கொண்டு…

உனக்கென்ன???

படைவீரனல்லவா…

உயிர் உறிஞ்சிய முத்தத்துடன்

நாட்டுக்காய் என

கூறிக்கொண்டே..

சிரித்தபடி சென்றுவிட்டாய்!!

திண்ணியது உன் மார்பு மட்டுமல்ல

மனமும் தான் போல..

கடிகார முட்களாய்

மீண்டும் மீண்டும் 

உன் ஞாபகக் குதிரைகள்..

கனைத்தபடி இருக்கின்றன..

என் இரவுகளின் 

முடிவுகளையும்!!

விடியல்களின் 

தொடக்கங்களையும்…

உன்வசம்

ஆக்கிக் கொண்டாய்..

அபோதெல்லாம்

என் வீட்டில் மலர்ந்திருந்தன

சாமந்திப்பூக்கள்..

இப்போது

வாடிக்கிடப்பது

சாமந்திகள் மட்டுமல்ல..

எப்போது வருவாய் என் படைவீரா???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here