49.காத்திருப்பு_ 12.6_ பாரதி

0
271

காத்திருப்பு

இரத்த ஓட்டம் அற்று

சிதை மொத்தமும் சிதைந்தாலென்ன

வெற்றுக்கூடெங்கிலும் வழிந்துக்கொண்டிருக்கிறது

உன் நினைவுகள்.

இன்றும் காத்திருக்கிறேன்

இறுதியாக ஒருமுறை

உன்குரல் செவிதீண்டிடும்

உன்னதம் வேண்டி.

உயிர் என்பதென்ன கண்ணம்மா 

உன் மீது  கொண்ட பற்றுதலுக்கென 

ஓர் தடயம்.

இப்போதைக்கு  

மிஞ்சியுள்ள என்னுடல் 

பின்வரும் நாட்களில்

அதும் சிதைந்து

அருவம் என்றாகும்.

ஆனால் எண்ணம் ஈடேறும் வரை 

மரணம் என்பது எனக்கில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here