50. இயற்கைப்பெண்_13.3_ஆஹிரி

0
468

இயற்கைப்பெண்

பேரண்டத்தின் அழகி நான்..

புரட்சி என்று கூறிக்கொண்டே

உருக்குலைத்துவிட்டாய்..

பசுமைக்காடாய் 

இருந்த என் தேகம்

பாலைவனநிலமென

வறட்சியாய்..

என் காதல் பூங்காக்களில்

பூத்துக்குலுங்க மலர்கள் இன்றி

செழிக்கின்றன கள்ளிச்செடிகள்..

கண்களை மறைத்து 

நாகரீகம் எனும் 

திரையப்போட்டபடி..

வேறும்பற்றைக்காடடா நீ!!

கொட்டிக்கிடக்கும்

நட்சத்திரங்களாய் என் காதல்..

அள்ளிக்கொடுத்த போதும்

அவை விழல் நீராய்!!

என்னை எனக்காக

ஏற்க முடியாதெனில்..

மறுக்கமாட்டேன்

என்னிடமிருந்து விலகியே இரு!!

இல்லையெனில் விலக்கி

வைக்கிறேன் 

என் கோவமென்னும்

கொரோனா சிதறல்களால்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here