51. ராட்ஷசனின் காதலி_9.5_ஆஹிரி

0
575

ராட்ஷசனின் காதலி

என்னுள்ளேயான

உன் ஒவ்வொரு 

தேடல்களும்

அலைகடலென

ஆக்ரோசமாய்..

ஆழமாய்..

வன்மையாய்..

அந்த வன்மைக்குள்ளும்

சிறு மென்மையோ???

உன் இழக்கங்கள் 

எல்லாம் என்னுடன் மட்டுமாய்..

உன் ஆனந்தத்தின் 

ஆரம்பமாய்..

உன் கோவங்களின் 

குளிர்மையாய்..

உன் மோகங்களின் 

வடிகாலாய்..

உன் அத்துணை

தேவைகளுக்கும் நானே..

உன் தேவைகளைத்

தீர்த்த பின்னே

முதுகு விடைத்த உன் 

இறக்கைகள் கொண்டு 

காற்றைக் கிழித்தபடி

பறந்துவிட்டாய்..

தரையை உதைத்து

உந்திக்கொண்டே

மேகம் தொட விழைகிறேன்..

பறப்பதற்கு நான் என்ன

உன்னைப் போல

ராட்ஷசனா??

காற்றைத்துளைத்து

கண்களால் துழாவியபடி

என் காத்திருப்புக்கள்..

உனைத்தேடியே

இலவம் பஞ்சென நான்..

அந்தி சாய்ந்து விட்டதடா.. 

வந்து விடு என் ராட்சஷா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here