53.வறண்ட இதழ்களின் காத்திருப்பு காதலனுக்காய்…_8.7_Soundarya

0
486

வறண்ட இதழ்களின் காத்திருப்பு காதலனுக்காய்…

பிள்ளையின் வெற்றியை தனதாய்
கொண்டாடும் தந்தை!
பிழையை தாயினதாய் ஏசுவான்!

இயற்கை பெண்ணிற்கும் அதே நிலையே!!
ஆடம்பர ஆசையில் அறிவிழந்து
பிள்ளைகள் செய்த பிழைகள்!

விழுந்தது இயற்கை தாயின் தலையில்…
கோபத்தில் பிரிந்தான் மழைக்காதலன்!!

ஏக்கத்தில் வறண்டு வெடித்த இதழ்கள்
அவள் காதலன் பார்வையில் படாதா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here