54. வென்று வா_11.18_Poornima Karthic

0
486

காதலாய், காமமாய்

கனவில் களவாடும்

கண்ணுக்கு தெரியா எதிரிகளோடு 

கடும் சண்டையிட்டு

 வீட்டில் காத்திருக்கிறேன் நான்

கனவோடு காதலையும் சுமந்து

சென்று வா

வீழ்த்தி வென்று 

வீர பதக்கம் மார்பிலேற்று

வீரனாய் வந்தால் 

விண்ணை பிளக்கும் 

மகிழ்ச்சியோடு மற்றுமொரு

மணவாழ்வு வாழலாம்

வீழ்ந்து வென்று
வீர மரணமேற்று
மாவீரனாய் வந்தால்
மண்ணில் பிறக்கும் நம்
மகன் உன் பாதசுவடு பற்றி
மகத்தான சேவையை
மாற்றமின்றி தொடர்வான் என்பதற்கு
மேடிட்ட வயிறே சாட்சி

அச்சத்தை மனதிலடக்கி
ஆதுரத்தோடு அதரத்தால்
நெற்றி திலகமிட்டு அனுப்புகிறேன்
சென்று வா! வென்று வா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here