57.கால்களிடத்தில் கண்ட காதல் கவிதை_11.18_Soundarya

0
486

தன்னில் அவளை நிருத்தி
பசலையில் அவள் இழந்த
எடைச் சோதனையில்
கருங்காலணி அணிந்த கால்விரல்கள்…

அவள் இதழைத் திருத்தி
பசலையில் அவள் துறந்த
ஊட்டத்தை ஊட்டுவதில்
கருத்தமீசையின் கீழிருக்கும் செவ்விதழ்கள்…

அவள் இடையை வருத்தி
பசலையில் அவள் பிரிந்த
ஆதாரத்தை கூட்டும்
கருத்திருந்த அவன் இருகரங்கள்…

அவன் ஆசைகளில் சிரித்து
பாதுகாவலன் அவனின் ஆரோக்கியத்தை
அலசி ஆராய்வதில்
கருமணிகள் அலைபாய இருவிழிகள்…

காதலும் தேடலும் கண்ணியமாய்
புகைப்படக் கலைஞரின் கருவியில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here