58. கயல்_6.3_லக்ஷ்மணன் 

0
451

கயல்

கொக்கின்வாய் அகப்பட்ட 

குளத்துமீனொத்து

சிக்கித்தவித்தேனுன் சின்னவிழியதனில்

அலகில் தேங்கிநின்ற ஆழாக்கு நீரதனில்

ஆர்ப்பரித்து திரிந்திடுமே அச்சிறுமீன் அதுபோலே 

விழிநீரில் வீழ்ந்ததுவே

விந்தைமிகு என்னாவி

விலகிநின்ற அலகின்வழி

விரைந்து துள்ளும் கயலினைப்போல்

இமைகொஞ்சம் தளர்த்துவிடின்

தமைநீங்கி உமைச்சேர்வேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here