59. துணை_12.8_லக்ஷமணன்

0
465

துணை


இயல்பில் தனிமை விரும்பி நான்

எனக்கான காரியங்கள் எதுவாயினும் சரி

எனது மெனக்கெடல்களே எப்போதும் போதுமென்பேன்

அறுசுவை உணவு சமைப்பதாயினும்

ஆற்றில் நீந்திக் குளிப்பதாயினும்

தனிமைநாடி வெகுதூரம் ஓடினேன்

அகத்தில் அமர்ந்து ஏட்டைப் படித்தும்

செகத்தில் ஒருவரை நாடாதிருந்தேன்

இனிமை தருவது தனிமை என்றே

மனிதர் மறந்து மரமாய் நின்றேன்

கனிதரும் காடுகள் சுற்றித் திரிந்து

பனிமலர்ச் சோலையில் நறுமணம் கொண்டேன்

இனிவரும் காலம் இளமைதவிர்த்து 

நனிமயிர் யாவும் நன்றாய் நரைத்து

வருகூற்றின் கால் வரவதைக் கண்டு

கருஇருள் படரும் அந்திப் பொழுதில்

அந்தகன் வரவை ஆருயிர் உணர்கையில்

தனிமை விலக்கி துணை வேண்டுமென்றேன்

மைப்பூசியநன்  கண்கள்தவிர்த்து கைப்பேசியிடம்

யான் தஞ்சம தடைந்தேன்

குருஞ்சேதி பலவும் கொட்டிக்கிடந்தும்

அருஞ்சொல் கேட்க ஆவிஅலைந்தேன்

பரஸ்பரம் பேச பலபேர் உண்டு

நிதர்சனம் புரிந்தது கைப்பேசி கண்டு

வாடிய மலரை வண்டுகள் தீண்டா

உண்மையை உணர்ந்தே உறங்கிப்போனேன்

என்புரு கொண்டும் என்கை நீங்கா

அன்பரும் நீயே அலைபேசி துணேயே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here