69. வானம் வசப்படும்_9.8_லக்ஷ்மணன்

0
467

வானம் வசப்படும்


அரிவை இவளைன்று குடத்திலிட்டடைக்கு முன்னம்
ஆற்றல் கைக்கொண்டே ஆற்றுநீராய் ஆவிர்பவி


இருபதாம் நூற்றாண்டின்இணையில்லா காலந்தனில்
ஈசலாய் வாழ்வதொழிந்து பூசைகொள்ள வைத்திடுன்னை


உறுசூது வென்றுநாளை உவகையுடன் வாகைசூடி
ஊர்வலம் போகும்நாளை ஊழ்வினையும் தடுத்திடாது


எண்திசையும் திறந்திங்கு எதிர்நோக்கும் உன்வரவை
ஏழ்கடலும் சிறுகுளமே ஏந்திழைநீ கரம்வைத்தால்


ஐந்தவியும் தன்வீணை தரைவைத்தே வரந்தருவாள்
ஒண்மை நிறைந்து நீயும் ஒட்பமது கொள்வாய்


ஓவியனின் தூரிகையும் ஓர்கவியும் உனைப்பாடும்
ஔசர மனத்தை மாற்றும் ஔடதமும் நீயன்றோ


வியனுலகு தனைவிட்டு விண்மேவும் காலமிது
சிறகுகள் முளைத்தேனும் சிறைவாசம் நீங்கி வா


வா…..நம் வசப்படும்
அந்த வானமும் உன் வசப்படும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here