76. உணர்வோடு கலந்தவனே_12.12_சேதுபதி விசுவ நாதன்_

0
415

காதலால் கசிந்துருகி

கவலைகளை மறைத்துவிட்டு

உன்னோடு நானிருந்த

நிஜங்களோடு பயனிக்கின்றேன்

மெல்ல நகர்ந்த நாட்களோ

விசமென்று தெரியாமல்

தனிமையின் ரசிகனாய்

நினைவோடு வாழ்ந்தேனே

விவரங்கள் தேடிய

விடியலும் போனதடா

குரலோசை கேட்டிடவே

இதயமும் துடிக்குதடா

ஓடிய பாதங்களோ

ஒருநாளும் நின்றுவிட

உன் வருகைக்கு ஏங்கிய

வெற்றுடலும் தவித்திடுதே

நெடுந்தொலைவில் நீயிருக்க

நிகழ்ந்தவைகள் அறிந்தாயோ?

என் உறவும் சிந்தையிலே

குப்பையென்று நினைத்தாயோ?

வேகாத என்னுடலை

மண்ணோடு புதைத்திடவே

மறவாத என் ஏக்கம்

பல ஆண்டு தொடர்ந்திடுதே

உன் குரல் கேட்டிடவும்

உன் நலம் அறிந்திடவும்

அலைப்பேசி சிணுங்கலுக்கு

அழுகின்றேன் பசிகொண்ட குழந்தையாய்

அன்புள்ள மகனே…

ஒருமுறையேனும் சொல்லிவிடு

உன் தந்தை காத்திருக்கிறேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here