81. அவசரக் காதல்_11.22 Nusrath Amana

0
449

அவசரக் காதல்


பனிவிலகாத காலை ஒன்றில்

உன் அவசர முத்தத்தினை

அனுபவித்த நாள்…


அன்று,

உன் ராணுவ உடையின் 

கணத்தை தாண்டிச் செல்ல

என் தளுவல்கள் அத்தனை போராடியது

ஈரம் காயாத என் கூந்தல் இன்னும் 

மறக்கவில்லை அப்போதான

உன் விரல்களின் ஸ்பரிசங்களை


கொளுசு வழி நளுவிய என் நாணங்கள்

பாதம் வரை தீண்டிச் சென்றதை

அடிவயிற்றில் குறுகுறுப்போடு 

உணர்ந்ததும் அன்றுதான்


சில நொடிகள் மட்டுமே தொட்டு மீண்ட

உன் இதழ்களில்

கலவி தாண்டி காதல் கண்டதும் அன்றுதான்

அருகிருக்கும் போது தேடாத ஏதோவொன்றை

விழிகள் மூடி நான் தேடியதும் அன்றுதான்


ஒரு காவியத்தை அவ்வளவு அவசரமாய்

நிகழ்த்திப் போய்விட்ட நீ,

எனக்குள் மட்டும் மிக மெதுவாய் 

நினைக்கச் செய்துவிட்டாய்

உன் கடமைகளை என் உணர்வுகள்

அங்கீகரித்தவை தான் – இருந்தும்

எதிர்பார்க்கிறேன் 

உன் அவசர வருகைக்காய்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here