84. கனவுப்பெண்_7.6_Nusrath Amana

0
467

கனவுப்பெண்


தொடுவான எல்லைகளுக்கு அப்பால்

உன் விழிகள் எதையோ தேடுகிறது

வான் பார்த்துநிற்கும் மலைகளுக்கு அப்பால்

உன் மனது எதையோ உருவகிக்கிறது.


உன்னெதிரில் மின்னிடும்

தாரகைகளும்

உன்பாதங்களை முட்டிநிற்கும்

பொய்கைப் பூக்களும்

சற்றும் உன்னைச் சேரவில்லை..


சில தேடல்கள் விம்பங்களற்றவை

சில கனவுகள் எதிர்காலமற்றவை

இது புரிந்துகொள்ள அனுபவங்கள்

பல கடந்தாக வேண்டுமென்பதில்லை.

ஒரு நாளில் நீ உதிர்த்துவிடும்

கண்ணீர்த் துளிகள் போதும்


நீ கவனிக்கவில்லை என்பதால்

வானத்து நிலவு உன் வாசலை தாண்டாமலில்லை

நீ பார்க்கவில்லை என்பதால்

வளர்ப்பு நாய்க்குட்டி உன் நிழலினை

சுற்றி வராமலில்லை


மலர்ப்பெண்ணே..!

தனிமையினை தேடாதே

இல்லாததில் தொலையாதே

கொஞ்சம் சிந்தித்துப் பார்

உனக்கானது இன்னும்

உன்னருகே தான் இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here