85. ஏக்கம் _12.13_ Nusrath Amana

0
426

ஏக்கம்


மன்னிப்புக்காய் ஏங்குதல் கொடிது

அது அன்பின் எதிரொலி என்பதால்

அவ்வளவு இலகுவாய் கிடைத்துவிடுவதில்லை


ஜனித்து மரணித்த

அத்தனை உயிருக்குள்ளும்

மன்னிப்பின் தவங்கள் மறைந்திருக்கும்

மயானங்களின் நீண்ட

மெளனப் பின்னனியும் அதுதான்


ஒரு முறையாவது

கடைசி தருணத்திலாவது

என்ற யாசகங்கள்

வலிகள் மிக்கவை

இது அனுபவத்தில் மட்டுமே

உணரப்படுவதால் தான்

மன்னிப்பதற்கான வாய்ப்புகள்

குறைக்கப்படுகிறது


இனியும்

வேண்டாம்..

யாரையும் மன்னிப்பிற்காய்

தேடவும் வேண்டாம்

யாரையும்தேட வைக்கவும் வேண்டாம்

நாம் மன்னிப்போம்

என்புகள் இற்றுப்போகுமுன்

மன்னிப்பில் உரையாடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here