87. உன்னதம்_14.12_ Nusrath Amana

0
364

உன்னதம்


காதலின் சின்னமென்று

காலத்தால் பதிவேற்றப்பட்டவை

காவியம்

புரிகிறதா வெறும் காவியம் தான்.

அது நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டியதாயின்


அதோ..,

உங்கள் சுவடுகள்  உட்பட

நீங்கள் விட்டுச்சென்ற

எத்தனையோ கழிவுகளையும்

வேளை தவறாது அப்புறப்படுத்தும்

தூய்மையாளனின் கடமை

உன்னதமாய்ப் போற்றப்பட வேண்டியது


காதலைக் காட்டிலும் கடமை சிறந்தது.

இப்படிக்கு 

ஷாஜகானின் மனைவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here