88. கண்ணம்மா_9.9_Nusrath Amana

0
383

கண்ணம்மா


மகரந்தங்கள் காவித் திரியும்

பட்டாம் பூச்சியாய்

கனவுகளின் வழியே

வாழ்வினைத் தேடத்துடிக்கும்

மங்கையவள்


கங்குல்கள் நீங்கக் கதிரவனைக்

காத்திருக்காத காரிகையவள்

மரபுகளுக்குள் மறையாத மனிதியவள்

தனக்கென்று ஓர் உலகமைக்க

தன் நாணங்களுக்கு

தீப்பிழம்புகள் பூசியவள்


அவள் பாரதியின் கண்ணம்மாவாகவும்

இருக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here