92. பச்சை நண்பேன்டா!!_10.4_Archana Nithyanantham

0
562

பச்சை நண்பேன்டா!!

நாங்க மூணு பேரும் ‘நண்பேன்டா’

நொடியும் பிரிஞ்சதில்லை – நம்பேன் டா

இந்தக் குட்டைக்கு நாங்க ராஜா தான்

ராங்கு காட்டினா நீ பேஜார் தான்

ஒன்னா சேர்ந்து சுத்துவோம்

சும்மாவே சோரசா கத்துவோம்

வாழ்க்கை ரொம்பவே ஜாலி

அவளைப் பார்த்ததும் முடிஞ்சதெங்க ஜோலி

அவ இலை மேல தாவும் அழகப் பார்க்க

தினமும் நாங்க தவம் கிடப்போம்

தண்ணிக்குள்ளே அவ நீந்தும் போது

உள் நீச்சல் அடிச்சு தொடர்ந்திருப்போம்

போறப்போக்கில அவ வீசும் பார்வையில

கிறங்கி மயங்கித்தான் சொக்கிடுவோம்

காலந்தெரியாம அவ சிரிப்பில் சிக்கிக்கொள்ள

கவிதை நூறு தினம் பாட்டெடுப்போம்

வசந்த காலமும் வந்தது

அவள சேரும் நாளையும் தந்தது

குட்டையின் மத்தியில் இலை மேல

காத்திருந்தா ஒரு சிலை போல

தாமரைப்பூ பாசக்காரி

ஆளை மயக்கும் வாசக்காரி

உலகம் காணாத பேரழகி

போட்டியே இல்லாத ஓர் அழகி

முந்திப் பாய்ஞ்சோம் நீருக்குள்ள

எங்க பேச்சுத்தான் ஊருக்குள்ள

மூவருமே அவ வாசல் சேர்ந்தோம்

ஏமாற்றம் கண்டு மனசு சோர்ந்தோம்

பச்சை சட்டை அணிஞ்ச எருமை போல

தவளை வடிவில இருந்தான் ஒருவன்

அழகியின் கையை இறுகப்பற்றி

திமிராய் எங்களை முறைச்சான் சிறுவன்

‘விலகிச் செல்!’ என்று நாங்கள் எச்சரிக்க

‘வெட்டிடுவேன்’ என்று அவன் உச்சரிக்க

சண்டையிட நாங்க துணிஞ்சிருக்க

எங்க கன்னத்தில அவன் கைய வைக்க

மயங்கி மல்லாந்தோம் மூவருமே

சிரித்துப் பரிகசித்தனர் யாவருமே

வாயும் போச்சு வடையும் போச்சு

ஆனா எங்க நட்பு இன்னும் மிச்சமிருக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here