93.போய் வா!_ 11.23_Archana Nithyanantham

0
430

போய் வா!

கையிலிட்ட மருதாணி

நிறம் மங்கவில்லை

மஞ்சள் பூசிய பொன் தாலி

வாசம் உலரவில்லை

திருமணத்தின் பரபரப்புகள்

இன்னும் ஓயவில்லை

உனது முதல் முத்தத்தின் ஈரம்

கன்னத்தில் காயவில்லை


பிறந்தவீடு பிரிவின்

வலிகள் குறையவில்லை

புகுந்தவீட்டின் பழக்கம்

மனதில் பதியவில்லை

கல்யாணப் பரிசுகள்

ஒன்றுகூடப் பிரிக்கவில்லை

அலைபேசியில் வாழ்த்துகள்

அமைதி ஆகவில்லை


வாழ்வின் ஒருமுறை ஆரவாரம்

அனைத்தையும் களிப்புற வேண்டும்

ஆயினும் விடை தருகிறேன் உனக்கு

ஆசைகளைப் புதைத்துக்கொண்டு நானும்


உன் உள்ளத்தில் எனக்கோர் இடம் போல

உன் உடுப்பின் கடமையிலும் பங்குண்டு

நமது மாளிகையின் மன்னன் நீ என்ற போதும்

இம்மண்ணின் மைந்தன் நீ, போய் வா அன்பே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here