94. மாறட்டும்_14.13_Archana Nithyanantham

0
474

மாறட்டும்

உலகின் அதிசயம் எதிரே நின்றாலும்

அண்ணாந்து பார்த்திட நேரமில்லை

கலையும் அழகும் மனதை ஈர்த்தாலும்

கவனம் மட்டும் சிதறவில்லை

பிறரின் ஒதுக்கப் பார்வை பெற்றாலும்

தனது ஒதுக்கும் பணியைத் துறந்ததில்லை

வரும்முன் காத்திடும் படையோரைப் போற்ற

மனிதர் என்றும் நினைப்பதில்லை

மெத்தனம் கொன்று பொறுப்புணர்ந்து

மக்கள், நாட்டினை வீடெனப் பேணட்டும்

குனிந்து குனிந்து கூன் விழுந்தோர்

நிமிர்ந்து எழுந்து உலகைக் காணட்டும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here