96. நம்பிக்கையோடே காத்திரு!_6.8_ஜெயக்குமார் சுந்தரம்

0
433

நம்பிக்கையோடே காத்திரு!

நீர் நிறைந்த குளத்தினுள்ளே மீன்கள் இருக்குது

நீந்தி குதித்து நீருக்குள்ளே களித்திருக்குது

பார்த்திருந்த நாரையொன்று காத்திருந்தது

நேரம் பார்த்து மீனை அது கௌவிச் சென்றது.

பனங்கிழங்கை பிளந்தது போல் நாரையின் அலகு

அலகின் கீழே தோல் பை ஒன்று தொங்குது, அழகு

தோல் பையினுள் நீர் இருக்கும் அழகினைப் பாரு

நீரிலிருந்து துள்ளி குதிக்கும் மீன்குஞ்சைப் பாரு

தொண்டையினுள் போகும் வரை ஜீவன் நிச்சயம்

வாயினுள்ளே இருக்கும் வரை வாழ்வு நிச்சயம்

வாய்ப்பு ஒன்று கிடைக்கும் வரை காத்திருந்தது

வழியொன்று திறந்ததுமே வெளியில் வந்தது

வாயினுள்ளே சென்ற மீனின் நம்பிக்கை பாரு

வாய்ப்பு கிடைத்த வேளைப் பார்த்து தப்பிக்குது பாரு

நம்பிக்கையை இழந்துவிட்டால் மரணம் நிச்சயம்

நம்பிக்கையோடு காத்திருந்தால் வாழ்க்கை நிச்சயம்

மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்து சென்றாலும்

இறைவன் கரம் நடத்துமென்ற நம்பிக்கை வேண்டும்!

கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் சூழ்ந்து வந்தாலும்

இறைவனையே சார்ந்திருந்தால் அணுகிடாது நோயும்!

         ஜெயக்குமார் சுந்தரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here