Tiny Story Sample _விண் பயணம் _ ஜான்சி

0
368

விண் பயணம்

கரிய மேகங்கள் மேல் பாதம் பதிந்து நடந்து செல்வது தான் எத்தனை சுகம்? எத்துணை மென்மை? ஐயையோ இப்போது எதற்கு இந்தச் சூறைக்காற்று?

இதுவரை நான் கால் பதித்து நடந்து கொண்டிருந்த அத்தனை மேகங்களும் கலைந்து ஓட ஆரம்பித்து விட்டனவே?

நான் எங்குப் பாதம் பதிப்பது? தடுமாறி மண்ணில் விழுகின்றேனே? …ஆ ஆ ஆ…டமால் டப் …

சனியனே , எருமை மாடே தினம் கனவு கண்டு எழுந்து, தூக்கத்தில மெத்தை மேல நடந்து என் மேல டொப்புன்னு விழுந்து வைக்கிறியே? உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?

“மன்னிச்சுக்கோமா” அவசரமாய் எழுந்து கட்டிலில் படுத்து தலைவரை போர்வை மூடிக் கொண்டான் அவன்.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here