Tsc 1. மீண்டும் அவள் _ Murugesan Laxmi

0
420

மூச்சு வாங்க ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்த ராமன், எதிர் இருக்கையில் கணவன், குழந்தையோடு இருந்தவளைப் பார்த்ததும் பகீரென்று இருந்தது. யாரை வாழ்நாள் முழுக்க பார்க்க கூடாது என்று எண்ணி இருந்தானோ, அவளை பார்த்ததால் ராமனின் முகம் கருத்தது. வளவளவென்று ராமனுடன் பேசிக்கொண்டு வந்த அவள் கணவன் வண்டி நின்றதும் குழந்தைக்கு பால் வாங்க வெளியே சென்றான். எதிர் இருக்கையில் இருந்த அவள் படீர் என ராமனின் காலில் விழுந்தாள். “என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, இவருக்காக தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்,” என்றாள். பேத்தி மீது இருந்த பாசம், ராமனை இளக்கியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here