TSC 102. வெற்றி என்பது யாதெனில்… _ Sharmi Usha

0
465

பள்ளி முதல் புகழ் பெற்ற மேலாண்மை கல்லூரியில் எம்பிஏ பட்டம் வாங்கி உயர்ந்த பதவிக்கு முதல் ஆளாக கேம்பஸ்ஸில் தேர்வாகி, தனக்கு ஏற்றார் போல அழகிலும், அறிவிலும் சிறந்த துணையைப் பெற்று வாழ்க்கை அமைந்தது வரை தோல்வியே அறியாத வெற்றி நடை போட்டஅவள் வாழ்க்கையில் இடியென இறங்கியது விதி!

“ஆட்சிஸம்ங்கிற நரம்பியல் குறைபாட்டால உங்க பையனோட உண்மையான ஐ.க்யூ கணிக்கிறது கஷ்டம். “

“இப்ப இருக்கிற டெஸ்ட் படி ஐ.க்யூ கம்மியா காட்டுறத பார்த்தா தெரபி ஓரளவுக்கு உதவுமே ஒழிய பிற்காலத்தில் யார் உதவியும் இல்லாம வாழ்ற அளவுக்கு குணப்படுத்துறது கஷ்டம்”

தன் வெற்றிகளை புறந்தள்ளிய இருபது வருடத்திற்கு முந்தைய அந்த வார்த்தைகளை மனதில் அசை போட்டவளின் கண்கள் நீரை வார்க்க, அந்த கணத்தில் கண்களால் அது வரை தொடர்ந்திருந்த தன் மகனை அந்த கூட்டத்தில் தொலைத்து விட, ‘அய்யோ, சரியா பேச வராத! எங்கையாவது வழி தெரியாம போயிடுவானோ’, என்ற தவிப்போடு அவனைத் தேட, அவள் முதுகில் தட்டி 60,000$ காசோலையை அவள் கண் முன்னே நீட்டி நின்றான், பார்வையைக் கோர்க்கத் தெரியாமல் கள்ளமில்லா சிரிப்போடு.

பிண்ணனியில் மூச்சிறைக்க ஓடி வந்த கணவனின் குரல், “அடுத்த முறை ஆர்ட் எக்ஸிபிட்க்கு நான் கூட போக போவே தேவை இல்லை போலடி, அவனே சரியா வழியை பார்த்து வந்துட்டான்”, என்று ஒலிக்க தாயாய் வென்ற உவகை அவள் கண்களில் இருந்த கண்ணீரை கடலாய் பெருக்கெடுக்க வைத்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here