Tsc 16. வாழ்த்துக்கள்! _ அர்ச்சனா நித்தியானந்தம்

0
416

தனது அலுவலக வரவேற்பறையில் அவள் தனக்காகக் காத்திருப்பதை அறிந்து, பதறியடித்துக்கொண்டு ஓடுகிறான்.

இனி வாழ்வில் அவளை சந்திக்கவே முடியாதபடி, விதி இரு வீட்டார் மூலம் அவர்களின் உன்னத காதலை உடைத்து, காதல் கிளிகளைப் பிரித்துப்போட்டிருக்க, இறுதியாய் ஒரே ஒரு முறை அவள் குரல் கேட்டிட, அவள் முகம் பார்த்திட மூச்சிரைக்க வந்து நின்றான்.

“உனக்கு கல்யாண ஏற்பாடாயிருக்குல்ல, அதான் வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன், அஜய்…”

“என்ன ப்ரியா சொல்ற, எனக்குக் கல்யாணமா?”

“ம்ம்… அப்புறம் ப்ரியா இல்ல, இனிமேல் மிசஸ். ப்ரியா அஜய்’னு முழுசா கூப்பிட பழகிக்கோ.”

  • அர்ச்சனா நித்தியானந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here