TSC 17. உடைந்த பிம்பம் _ Bharathi

0
380

6ம் வகுப்பு சேர்ந்த புதிதில் புதுதோழிகளுடன் உணவை பகிர்ந்து உண்ட போது 5 ம் வகுப்பு வரை உடன் படித்த தோழி “அவங்க வேற ஆளுங்க” என காதுக்குள் ரகசியம் படித்தாள்.

அவள் பேசியதன் அர்த்தம் புரியாது வீட்டிற்கு சென்று அப்பாவிடம் கேட்க “படிக்கற பசங்களுக்குள்ள எதுக்குமா அதுலாம்” என்ற சொல்லில் என் பார்வைக்கு மாமனிதரானார் அப்பா.

கல்லூரி பருவத்தில் ஒருவன் காதலை சொல்கிறான் என்றேன். விவரங்கள் கேட்டறிந்த பின் “அவன் வேற ஆளுமா” நீ நாளையிலிருந்து காலேஜூக்கு போகவேண்டாம்.

தந்தையின் மாமனித பிம்பம் சுக்கல் சுக்கலாக உடைந்தது போலொரு மாயை என்னுள்.

பாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here