Tsc 18. பூப்புனித நீராட்டு விழா _ பாரதி

0
387

வயதுக்கு வந்த மகள் உடல் தீட்டுப்பட்டதாய் சொல்லப்பட்டு
வீட்டுக்கு வெளியே சின்ன குடிசையில் கிடக்க கூலி கேட்டு போன வெள்ளையம்மாளின் கணவன் இன்னும் வீடு திரும்பவில்லை.

எந்த கட்சி தலைவரோ இறந்ததற்கு எங்கெங்கும் கலவர கூச்சல் கேட்க வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது அந்த பெரும் வன்முறைக் கூட்டத்திற்கு
குடிசைகளும் தொழுவங்களும் தீக்கிரையாயின.

காற்றில் பெண்கள் குழந்தைகள் ஓலம் கேட்டபடி இருக்க
திடீரென்று இரத்த சகதியாய் வெள்ளையம்மாள் முன் வந்து விழுந்தான் அவளின் கணவன் . அவரை சுற்றி கையில் கத்தி கோடாரியுடன் பதினைந்து பேர்.

அருகில் நாளை பூப்புனித நீராட்டு விழா கொண்டாட இருந்த வெள்ளையம்மாளின் மகள் தீயுடன் கட்டி புரண்டு கொண்டிருக்கிறாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here