Tsc 21. பேய் _ முகில் நிலா

0
77

பேய் :

கண்மணி ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தாள் அப்பொழுது அவள் காதில் ஜல் ஜல் ஜல் என்று மெலிதாய் கொலுசொலி சினுங்கியது அவளும் அங்குமிங்கும் பார்த்தாள் நிசப்தம் மட்டுமே காணப்பட்டது…

மீண்டும் புரண்டு படுத்தாள் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் மெத்தையில் மீண்டும் அதே போல் கொலுசொலி சற்றே பயந்துவிட்டாள் கண்மணி பின்பு எழுந்து அமர்ந்து கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தால் இருள் மட்டுமே அந்த ஜன்னல் அறையில் இருந்து அவளை அச்சுறுத்தியது…

என்னவாக இருக்கும் ஒரு வேளை பேயாக இருக்குமோ என்று பல எண்ணங்கள் அவளை அச்சுறுத்தியது என்று சொன்னால் மிகையாகாது பின் மெல்ல எழுந்து தன் அன்னையை எழுப்பி சிறிது தண்ணீர் குடித்து மீண்டும் படுக்கையில் படுத்தாள் ஆனால் இப்பொழுது கொலுசொலி கேட்க வில்லை என்று நிம்மதி அடைந்து மீண்டும் புரண்டு படுத்தாள்…

மீண்டும் அதே ஒளி எங்கே என்று பார்த்தால் அவள் பாதக்கொலுசுயில் இருந்தே அவ்வொலி கேட்டது இது எப்படி சாத்தியம் என்று அவளுக்கே தெரியவில்லை அம்மூன்று முத்துக்கள் வைத்த கொலுசில் இவ்வளவு சத்தங்கள் என்று அவளின் மெல்லிய சிலிர்ப்பு எழுந்தது…

பேய் என்ற அச்சம் இருக்க வேண்டும் ஆனால் உன் கொலுசொலி கேட்டே இத்தனை பயம் வேண்டாமடி கண்மணி என தன் மனதை அவளே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் உறங்கிப்போனாள் காலை 10 மணி ஆவதை அறியாமல்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here