Tsc 22. என்னைக் கொல்ல நீ யார்? _ பாலா சுந்தர்

0
347

என்னைக் கொல்ல நீ யார்?

அறுவை சிகிச்சையால் பெண்மையின் அடையாளமாய், தன்னவனி்ன் மோகத்தீயாய் இருந்தவற்றை அகற்றிய ஒரு மாதத்தில் ஆடையில்லாத தனது வெற்று உடலை கண்ணில் கண்ணீருடன் பார்த்தாள் ஷாலினி.

தூங்கி எழுந்ததும் அவளது இடைபற்றி மோகமாய் அணைத்து, அவள் இதழிடம் இதழ்கொண்டு பேசிய கணவனிடம் “வேணாம்…” என்று மறுத்தாள்.

” ஐஞ்சு வருஷம் முன்பு லவ் பண்ணதைவிட, “என்னைக் கொல்ல நீ யார்?என்னைக் கொல்லும் அதிகாரம் உனக்கு இல்ல” என்று தைரியமாய் பத்துக்கும் மேற்பட்ட கீமோவுடன் போராடும் இந்த ஷாலினியைத்தான் பைத்தியமா லவ் பண்றேன்டி கண்ணம்மா … என்னை முத்தமிடு .” என்றான் கணவன்.

அடுத்த கணம்… அவள் இதழ்கள், அவன் இதழ்களுடன் காதல் பேசின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here