Tsc 25. கருப்பட்டி காஃபி _ ராஜலட்சுமி நாராயணசாமி

0
371

ஒரே நாளில் வாழ்வின் மொத்தமும் தலைகீழாய் மாறுவதன் விதியை அனுபவித்துக் கொண்டிருந்தான்…

இனிக்க இனிக்க தின்ற வெள்ளை சீனியும், காளானும் பனீருமாய் கலந்தடித்த உணவுமாய், மட்டனும் சிக்கனும் நாவில் ஊறிய சுவையுமாய்… முட்டையும் பாலும் டீயுமாய் சாதாணமாய் நர்த்தனமாடியவை தான்…

ஒரு நாளில் அடிவயிற்றை சுருட்டி இழுத்த இமாலய வலி பிரசவவலியையும் மிஞ்சும் கொடுமையை கொடுக்க…, மருத்துவம் அதை சிறுநீரகக்கல் என்றது.

உப்புச்சப்பற்ற உணவும், காரம் புளி அகற்றவும், கால்சியம் குறைக்கவும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட, நம் வாழ்வியல் மாறியதன் கொடூரம் தான் முகத்தில் அறைகிறது…

ஆற்று நீரை அள்ளி குடித்து, நாட்டு கோழி சாறு குடித்து, வீட்டுத் தோட்டத்தின் காய் பறித்து, களைத்து வந்து கஞ்சி குடித்த காலத்தில் சிறுனீர்ப் பையில் கல்லும் இல்லை, இதயத்தில் ஓட்டையும் இல்லை, பெருவணிக சந்தையான நாட்டில் நோய்களும் மருந்துகளுமே பிரதானமாய்… எண்ணி நொந்து என்ன செய்ய? காலை சுக்கு காப்பிக்கு கருப்பட்டி வாங்கப்போகிறான் சந்தைக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here