Tsc 26. உயிரோடு கலந்துவிட்டாள் _ சேதுபதி விசுவநாதன்

0
396

உயிரோடு கலந்துவிட்டாள்

“டேய் மச்சி! இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவளையே நெனச்சுட்டு இருக்க போற? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா!” என்று சொன்ன பாரதிக்கு

“அவளோட வாழ்ந்த இந்த கொஞ்ச நாள் சந்தோஷமே போதும்டா. இப்படியே வாழ்ந்துக்கறேன்” என்று சொன்னான் அஸ்வந்.

“ஃபீல் பண்ணிட்டு இருந்தா மட்டும் போனவ திரும்ப வரவா போற? ஏன்டா இப்படி இருக்கற? சொல்றத கேளுடா” என்றான் பாரதி.

“இதுக்கு மேல பேச வேண்டாம்.இந்த ஜென்மத்தில அவதான் என் பொண்டாட்டி‍”என்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கல்லறையை நோக்கி சென்றான் அஸ்வந்.

– சேதுபதி விசுவநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here