Tsc 27. மெய் நிகர் மழை _ ராஜலட்சுமி நாராயணசாமி

0
370

பல மாதங்கள் கடந்து வந்த அவருக்கு அங்கே வரவேற்பளிக்க யாரும் இல்லை, முன்னெல்லாம் அவர் வரும் அறிகுறி தெரிந்தாலே ஓடி வந்து அவருக்குள் தஞ்சமடையும் மக்கள் கூட்டம் இன்று ஒதுங்கி நிற்கிறது…

அவர் மேலதிகாரி கேட்பாரில்லயா? இன்னிக்கு எத்தன எடத்துக்கு போன? எத்தன பேர்க்கு மகிழ்ச்சி குடுத்த? எந்தெந்த ஊர்க்கெல்லாம் போன?

என்ன பதில் சொல்வது…? உற்று நோக்கினால்…, அவரை நோக்கி வராதோர் கைகளிலெல்லாம் புதிதாய் இடம் பிடித்திருக்கிறது ஒரு வஸ்து…

அது என்னவென உற்றுநோக்கினால்…, அலைபேசியாம்… யாரும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்றி பேசலாமாம்… பல மாந்தர்கள் அதன் வழியே தான் குடும்பமே நடத்துகிறார்களாம்… அதிலே தான் இவரையும் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள் இவரருகே வராமலே…

சட்டென உதித்ததந்த எண்ணம்… “எந்த ஊர்லல்லாம் பேஞ்சன்னு கேட்டா இந்த போனு வழியா போன ஊரெல்லாம் சொல்லிடலாம் இந்திரன் கிட்ட ” என முடிவெடுத்து மும்பையில் தலை நீட்டினார்… வீடியோ நாடெல்லாம் செல்ல… இந்திரனிடம் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது… “நாடெல்லாம் நல்ல மாரி பொழிந்துவிட்டேன்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here