Tsc 28. புரியாத தொடர்கதை _ சேதுபதி விசுவநாதன்

0
429

புரியாத தொடர்கதை

“எங்கடி கிளம்பிட்ட? இப்ப தானே ஊர்ல இருந்து வந்த? அதுக்குள்ள ஏன் இப்படி மறுபடியும்?” என்று தோழி கேட்க,

“என்னடி‌ புதுசா கேட்கும்! நான் எப்பவும் போல தானே கிளம்புறேன்” என்று சொன்னாள் சுவேதா.

“அதான் எல்லா பிரச்சினையும் முடிஞ்சுதே. தம்பி படிப்பு, தங்கச்சி கல்யாணம், அம்மா அப்பாவுக்குனு எல்லாமே சரி ஆயிடுச்சே. அப்புறம் எதுக்குடி நீ மறுபடியும் அந்த நரகத்துக்குள்ள போற? போதும்டி” என்று சொன்னவளிடம்,

“எனக்கான எல்லா பிரச்சினையும் முடிஞ்சுதுடி. ஆனா இப்போ நான் உங்களுக்காக போறேன்!” என்று சொன்னவளின் முகத்தை குழப்பத்தில் பார்க்க,

“என்னை ஒவ்வொருத்தனும் தொடும்போதும், கொடுமையா நடந்துக்கும் போதும் தான் தெரிஞ்சது இவனுங்க காம ஆசை எந்த அளவுக்கும் கொண்டு போகுமுனு. முன்னபின்ன தெரியாத என்கிட்ட சம்மதத்தோட நடக்கும் போதே இப்படின்னா! அப்போ பிடிக்காத பொண்ணுங்ககிட்ட?” என்று சொல்லும் புரியாமல் அவள் இருக்க,

“என்னை மாதிரி உடம்ப விக்குறவ இல்லையினா இன்னைக்கு கற்பழிப்பு எந்த அளவுக்கு உயர்ந்திருக்குமுனு யோசிச்சு பாரு! எல்லாம் புரியும்” என்று சொல்லிவிட்டு பேக்கை மாட்டிக்கொண்டு தெருமுனைக்கு கிளம்பினாள் சுவேதா

– சேதுபதி விசுவநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here