Tsc 3. அன்னதானம் _ மேகலா அப்பாதுரை

0
357

அன்னதானம்…

“இங்கு நாள் முழுக்க அன்னதானம்ன்னு போர்டு வெச்சிருக்காங்களேப்பா…” என்ற மகளிடம்

“ஆமாடா இந்த கோயில்ல யார் வந்தாலும் சாப்பாடு போடுவாங்கடா.” கடவுளை வணங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டே மகளுக்கு பதிலளிக்க

“அப்புறம் ஏன்பா வாசல்ல இத்தனை பிச்சைகாரங்க…” என்ற மகளின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் விக்கித்து நின்றார் அந்த கோயில் தர்மகர்த்தா…

‌ மேகலா அப்பாதுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here