TSC 30. எலக்சன்… இன்னோரு முகம் _ Rajeswari D

0
408

ஏய் பொம்மி என்ன இன்னும் கிளம்பளையா நேரம் ஆச்சு அங்கே ஏற்கனவே எல்லோரும் வந்தாச்சு…

இருக்கா… நல்லதா துணி போட வேண்டாமா இப்ப போணா அடுத்து எப்ப போவமோ…

வண்டி கிளம்ப போகுது… பேசும் போது முன்னாடி உட்காரணும்டி அப்பதான் நம்மலோட படம் டிவியில் வரும்.

எங்கே எனக்கு அதெல்லாம் வேணாம்கா… சொன்னதுமாதிரி காசு தருவாங்க தானே…

அதெல்லாம் தருவாங்க தலைக்கு ஐநூறு ரூபாய் பேசி இருக்கு… இவங்க தரலைன்னா நாளைக்கு எதிர்கட்சி மீட்டிங்கிற்கு போயிடமாட்டோம் இது சீசன்மா…அவனவன் ஆட்கள் கிடைக்காமல் அலையறான். உண்மையான எலக்சனின் இன்னோருமுகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here