TSC 31. Big Boss _ Kavi Ragu

0
196

விழி திறந்தான் அலைப்பேசியை பார்த்தபடி சமூக ஊடகங்களில் தினமும் நீந்தி திளைப்பவன் அவன். தினமும் சமூகத்திற்கு கருத்து சொல்லாவிடிலே உணவு செல்லாது உறக்கம் வராது.

அவ எப்படி 3 புருஷனைக் கட்டலாம். பெண்ணுக்கு பணிவு அனுசரணை வேணும். இவளுக்கு பண்பேயில்லை, ஆணவம் தான் இருக்கு. திமிரு பிடிச்சவ. எப்படி கத்துறா. பஜாரி. அவ பொம்பளையே இல்லை’- பதிவை தட்டி விட்டான்.

அன்றைய தினத்திற்கான தனது கருத்தை சொல்லிய திருப்தியுடன் படுக்கையை விட்டு எழுந்தான். பல் துலக்கும் போது எடுத்து பார்க்க 60 விருப்பங்கள் 15 கமெண்ட்கள் வந்திருந்தது. தனது அறிவை, சிந்தனையை மெச்சிக் கொண்டான்.

அப்போதுதான் ஒரு வீட்டில் வேலை முடித்து விட்டு வந்த அவன் மனைவியிடம் உணவைக் கேட்க, “செத்த இருங்கு அசதியா இருக்கு” எனக் கூறிய மனைவியை பேச கூடாத வார்த்தைகளால் அர்ச்சிக்க தொடங்கினான்.

“கட்டின புருஷனுக்கு நேரத்துக்கு சாப்பாடு குடுக்க துப்பில்லை நீ எல்லாம் பொம்பளையா” என கேட்டு அடித்துவிட்டு அவள் கொண்டு வந்த சம்பள காசை எடுத்துக் கொண்டு ஹோட்டலில் சென்று சாப்பிட அமர்ந்தான். அடுத்த பதிவு போட்டபடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here