Tsc 32. மோக முள் _ பாலா சுந்தர்

0
367

மோக முள்!!!

“உன்னோட சிரிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதை தரும் உதடுகளை தொட்டுப் பார்க்கவா? நான் தொடும்போது அவற்றை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மட்டுமே உன் வேலை… மற்றதை நான் பார்த்துப்பேன், மற்றது என்றால் மற்றயெல்லாம் தான்.”

விவேக்கின் வாய்ஸ் மெசேஜைப் பார்த்ததும் சௌமியாவிற்கு வியர்த்துக் கொட்டியது, அவளிடம்தான் இப்படி ஹஸ்கி குரலில் யாரும் பேசியதில்லையே? சரசமாகப் பேசியதேயில்லையே?

ஆஃபீஸின் ரெஸ்ட்ரூமில் அதை பதினோராவது முறை எடு்த்து திருட்டுத்தனமாக கேட்டபோது சிரித்தாள் சௌமியா.

மற்றொரு எண்ணில் இருந்து வேறு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது “அம்மா நான் தான் டாடி போனில் பேசறேன்… நான் பேசறது கேட்குதா? பில் கட்டப்போன டாடிக்குத் தெரியாம மெல்ல பேசுறேன், இப்ப டாடிகூட ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். அவர் உங்களுக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் டாப்பிங்ஸ் மட்டும் 150 ரூபீஸ்க்கு வாங்கி சட்டை பாக்கெட்டில் வச்சிருக்கார்… கையும் களவுமா பிடிச்சிடுங்க, போன தடவை மாதிரி உன் பொண்ணு தான் வாங்கிக்கொடுத்தான்னு புருடாவிடப்போறாரு… அச்சோ டாடி இஸ் கம்மிங்… பைம்மா”

உண்மையான காதலுக்கும் ஹஸ்கி குரலுக்கும் ரொம்ப ரொம்ப தூரம் என்று நினைத்து சிரித்தவள், விவேக்கின் எண்ணை ப்ளாக் செய்து அவன் மெசேஜை டெலிட் செய்தவள் மோக முள்ளை முளையிலேயே கிள்ளி எரிந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here