TSC 33. இப்படியும் மாறிடுமோ! _ Rajeswari D

0
361

இழுத்து மூடி இருந்த கதவுகள் ஓயாது ஏசியின் மெல்லிய சத்தம்… வெளியே சூரியனின் உக்கிர முகத்தை லேசாக தணித்தது. ஓடிக்கொண்டிருந்த தனது இரண்டரை வயது மகளை இழுத்து அருகில் அமர்ந்தியவள் அன்றைய செய்திகளை பார்க்க டிவியை ஆன் செய்தாள் கன்யா.

பழைய நினைவுகள் என்ற தலைப்பில் முக்கிய செய்தி என செய்தி வாசிப்பாளர் நடந்தபடி செய்தியை கூறிக்கொண்டு இருந்தார். இரண்டாயிரத்து பத்தொன்பது, இருபதுகளின் ஆரம்பத்தில் பல பகுதிகளுக்கு முதல் முதலாக ஹெட்ரோகார்பன்,மீதேன் திட்டம் தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக துவங்கப்பட்டது.

அதன் காரணமாக சில வருடங்களிலேயே நிலத்தடி நீர் மட்டம் முழுவதுமாக குறைந்து ஒரு கட்டத்தில் நீரே இல்லாத நிலை ஏற்பட்டது.

இன்று பாலைவனமாக காணப்படும் பல பகுதிகள் அன்று மூன்று போகம் நெல் விழையும் பகுதிகளாக கண்டறியப்பட்டது… கூறிக்கொண்டு இருக்கும் போதே படார் என வெடித்த சத்தம் கேட்க… அடைத்த கண்ணாடியின் வழியே வெளியே பார்க்க சற்று தூரத்தில் கைவிடப்பட்ட மீத்தேன் கிணற்றில் இருந்து வெடித்த வாழ்வு வழியாக கேஸ் பரவ ஆரம்பித்தது்.

மகளை இழுத்தபடி வேகமாக சென்று அருகில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை தனக்கும் மகளுக்குமாக மாட்டியவள் வேகமாக மீட்பு பணியினரை அழைத்தபடி அவர்களின் வரவுக்காக காத்திருந்தாள்.

இனி வரும் எதிர்காலம் இப்படியும் மாறிடுமோ !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here