TSC 34. மாற்றம் _ Rajeswari D

0
339

அன்றைய நாளில் முப்பதாவது முறையாக ஒளித்த செல் பேசியை வெறித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தாள் மிருதுளா.

மீண்டும் ஓளிக்க போனை எடுத்தவள் இதோ பாரு வெங்கட் எப்போ உன்னோட காதலுக்கு சரின்னு சொன்னேனோ அப்பவே உன்னை நம்பறதாதான் அர்த்தம் அதற்காக நீ கூப்பிடற இடத்துக்கு என்னால வரமுடியாது.

நீ என்கிட்ட உன்மையாக தான் இருக்கிற என்பதை நீ தான் நிருபிக்கணும். என கேட்டவளிடம்…

எப்படி என கேட்டவனுக்கு… சற்றே கோபமாக பதில் உரைத்தாள். நீ உன்னோட சொந்தகாரங்கள கூப்பிட்டுட்டு வந்து முறைப்படி பெண் பார்த்து திருமணம் பண்ணிக்கோ… அப்புறம் எங்கே கூப்பிட்டாலும் வரேன் என கூறி கட் செய்தாள்.

மொபைலை கீழே வைத்தவள் கையில் இருந்த செய்திதாளில் முக்கிய செய்தியாக இருந்தது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் மீண்டும் அரங்கேறியது சேலம் பகுதியில் என்ற செய்தியை பார்த்தவளுக்கு சற்றே தனது பதிலால் தைரியமாக… கூடவே நிம்மதியாக உணர்ந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here