Tsc 36. அலாரம் _ வதனி பிரபு

0
429

அலாரம்…

“சுபி எழுந்துக்கோடி… சுபி…”

“ம்ச்… இப்ப ஏன் காதுக்கிட்ட வந்து கத்துற…”
“ஏன் சொல்லமாட்ட, தூங்க போகும் போது, மறந்துடாத, 5 மணிக்கு எழுப்பி விடுன்னு, என் மண்டைல அடிச்சு சொல்லிட்டு, இப்ப எழுப்பி விட்டா, உனக்கு கத்துறேனா… இனி உன்ன எழுப்பினா என்னை என்னன்னு கேளு…”

“சரி சரி… கோச்சுக்காத, தூக்கம் டிஸ்டர்ப் ஆனதுனால கோபப்பட்டுட்டேன்… அதுக்காக எழுப்பாம பழி வாங்கிடாத…”
” ம்ம் அந்த பயம் இருக்கட்டும்… போய் வேலையப் பாரு… “

” நீதான் எங்கள மாதிரி குடும்ப தலைவிகள கைவிடாம காப்பாத்துற கடவுள்…”

தன் தலையனைக்கடியில் ஒலித்த அலாரத்தை அனைத்து அன்றாட வேலைகளில் கலந்தாள். சுபி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here