Tsc 37. தங்கமே _ நர்மதா சுப்ரமணியம்

0
440

“ம்ப்ச் நீ சொல்ற டிசைன் எதுவும் எனக்கு புடிக்கலை. நானே பார்த்து உனக்கேத்தது போல வாங்கிட்டு வரேன்”

வெளிநாட்டில் அந்த நகை கடையில் நின்றுக் கொண்டு வீடியோ காலில் தான் செலக்ட் செய்திருந்த கழுத்து சங்கிலிகளைக் காட்டிக் கொண்டு பேசியவன் இணைப்பை துண்டித்தான்.

மறுவாரம் தாய்நாட்டிற்கு வந்தவன், வெளிநாட்டில் தன் சம்பாத்தியத்தில் முதன் முறையாய் வாங்கிய அந்த தங்க சங்கிலியை அவரின் கழுத்தில் அணிவிக்க,

ஆனந்த களிப்பில் கண்களில் பாசம் பொங்க முகம் மலர்ந்திருக்க அவனை உச்சி முகர்ந்தவர், “அம்மா இந்த செயினை இனி எப்பவும் கழட்ட மாட்டேன்யா” என்றார்.

“எனக்காக என் படிப்புக்காக உன் நகையெல்லாம் நீ அடகு வச்சது, நீ கஷ்டபட்டு வேலை செஞ்சதெல்லாம் போதும்மா. இனி உன்னை ராணி மாதிரி வச்சி நான் பார்த்துக்குவேன்மா” தன் தாயை முத்தமிட்டு அணைத்திருந்தான் அந்த அன்பு மகன்.

— நர்மதா சுப்ரமணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here